முதல்முறையாக கமலுடன் ஜோடி போடும் நயன்தாரா.. எந்த படத்தில் தெரியுமா.?

முதல்முறையாக கமலுடன் ஜோடி போடும் நயன்தாரா.. எந்த படத்தில் தெரியுமா.?



Nayanthara act in kamal movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தமிழில் 200க்கும் மேற்பட்ட வெற்றி திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார் கமலஹாசன்.

kamalhasan

கமலஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் வித்தியாசமான கதைகளை கொண்டிருக்கும் என்பதால் இவரது திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர். தற்போது இவர் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் கமலஹாசன் இப்படத்திற்கு பின்பு வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. இதன் பின்பு மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இயக்கத்தில் கமலஹாசன் தனது 234 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

kamalhasan

இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நயன்தாரா தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துவிட்டார். கமலின் படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும் என்பதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.