அன்னபூரணி ஆகிறார் நயன்.! ராஜாராணிக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபலங்கள்.!

அன்னபூரணி ஆகிறார் நயன்.! ராஜாராணிக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபலங்கள்.!



nayanthara-act-in-annapoorani-movie

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர்தான் நடிகை  நயன்தாரா. இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவில் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் ஏராளமான பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளது.

நடிகை நயன்தாரா தற்போது  அன்னபூரணி என்ற  படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், சுரேஷ் சக்கரவர்த்தி, கார்த்தி குமார்  உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து  நடித்து வருகின்றனர். அன்னபூரணி திரைப்படத்தை ஷங்கரின் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலேஷ் கிருஷ்ணா  இயக்குகிறார். 

இப்படத்தை தமன்  இசையமைக்க,  ஜி ஸ்டுடியோஸ்  மற்றும்  நாட் ஸ்டுடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ்  இணைந்து தயாரித்து வருகின்றனர்.ராஜாராணி  திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா மீண்டும் இப்படத்தின் மூலம் ஜெய் மற்றும் சத்யராஜ் உடன் இணைந்து நடித்து வருகிறார்.