தன் அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.!Nayandhara,s new technic

தமிழ் சினிமாதுறைக்கு வந்த புதிதில் நயன்தாரா வழக்கமான கதாநாயகிகள் போல ஒரு சில காட்சிகளில் தலை காட்டுவது, டூயட் பாடுவது என்று தான் இருந்து வந்தார். ஆனால், ஒரு காலகட்டத்திற்கு பின்னர் அவருக்கான கதைகளம் என்ன என்பதை அவரே தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார்.

Nayandhara

அதன் பிறகு தான் பல வெற்றி படங்களை கொடுத்து லேடி சூப்பர் ஸ்டார் என்று பெயரெடுத்தார். அதிலிருந்து பெண்களை மையமாகக் கொண்ட கதை என்றால் அனைவருக்கும் நயன்தாரா தான் ஞாபகத்திற்கு வருவார். அந்தளவிற்கு தன்னுடைய கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருப்பார் நயன்தாரா.

இதன் காரணமாக, நயன்தாரா தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தினார். அதோடு திரைப்படத்தின் பிரமோஷனுக்கும் வரமாட்டேன் என்று தெரிவித்து விட்டார். ஆனால் தற்போது அவருடைய லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்திற்கு ஆபத்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Nayandhara

ஏனெனில் அண்மையில் அவர் நடித்திருந்த ஜவான் திரைப்படத்தை தவிர்த்து, மற்ற திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் காரணமாகவே, தன்னுடைய அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் தலைகாட்ட தொடங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.