சினிமா

நாயகி சீரியல் கண்மணி யார் தெரியுமா? அவரைப்பற்றிய சில சுவாரசிய தகவல்கள்.

Summary:

Nayaki serial kanmani unknown secrets in tamil

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உண்டு. அந்த வகையில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் நாயகி தொடர் மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று.

இந்த தொடரில் நாயகியாக வித்யா பிரதீப் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இவருக்கு இணையான கதாபாத்திரத்தில் மற்றொரு நாயகியாக கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் பாப்ரி கோஷ்.

கடந்த 2009 ஆம் ஆண்டு கால்பெல்லா என்ற பெங்காலி திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமான பாப்ரி கோஷ் அதன்பின்னர்  க்ரோத் என்ற பெங்காலி படத்தில் நடித்தார். அதன்பின்னர் பெங்காலியில் சரியான வாய்ப்புகள் அமையாததால் தமிழ் பக்கம் வந்த இவர் டூரிங் டாக்கீஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பின்னர் ஓய் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானார். இந்த இரண்டு படங்களும் இவருக்கு சரியாக கைகொடுக்கவில்லை. இதனை அடுத்து கிடைக்கும் வாய்ப்புகளை வேண்டாம் என்று சொல்லால் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் பாப்ரி கோஷ்.

பைரவா, சக்க போடு போடு ராஜா, சர்க்கார், விஸ்வாசம் போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் நாயகி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

தற்போது நாயகி தொடரை தொடர்ந்து சன் டீவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டவர் இல்லம் என்ற புது தொடரில் நாயகியாக நடித்துவருகிறார் பாப்ரிகோஷ்.


Advertisement