நட்பே துணை வெளியாகி முதல் வாரத்திலேயே வசூல் வேட்டை நடத்தியுள்ளது! தமிழனுக்கு கிடைத்த பெருமை!natpe thunani movie collection


நட்பே துணை  ஹிப்ஹாப் ஆதியின் இரண்டாவது படம் ஆகும். அவர் நடித்த முதல் படமான "மேசையை முறுக்கு" ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நட்பே துணை படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கி இருக்கிறார். ஆனால் இந்த படத்திற்கு கிரியேட்டிவ் இயக்குநர் ஆதிதான். முதல் படத்தில் சொந்த வாழ்க்கையை கொஞ்சம் கற்பனை கலந்து படமாக்கிய இவர், இந்த முறை ஹாக்கி, செண்டிமெண்ட், நட்பு, ஜாலி என இளைஞர்களை கவரும் வங்கியில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

natpe thunai

இந்த வருடம் வந்த படங்களில் ஒன்று ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை. இந்த படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வசூல் செய்து வருகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால் வரும் நாட்களிலும் வசூல் வேட்டை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் கொண்டாடும் இப்படம் முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 1.68 கோடி வசூலித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. நட்பே துணை படம் வெளியானதிலிருந்து பாசிட்டிவ் கமெண்ட் அதிகமாக வருகிறது. நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது. கார்ப்பரேட்களிடம் இருந்து உரிமையை காக்கப் போராடும் கதை என்பதால், பலரும் இந்த படத்திற்கு ஆதரவு தருகின்றனர்.