சினிமா

சுந்தர்சி - ஹிப் ஹாப் ஆதி கூட்டணியில் புதிய படம்; வெளியானது பஸ்ட் லுக்!

Summary:

natpe thunai new hip hop aathi movie

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி மீசையமுறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தவர் ஹிப்ஹாப் தமிழா. 

சுந்தர்சி தயாரிப்பில் ஹிப்ஹாப் தமிழா இயக்கத்தில் உருவான மீசையமுறுக்கு படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது அதில் இடம்பெற்ற பாடல்கள் மாபெரும் வெற்றியை பெற்றன. 

இந்நிலையில் மீண்டும் சுந்தர்சியின் கூட்டணியில் இணைந்துள்ளார் ஹிப்ஹாப் தமிழா. ‘நட்பே துணை’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை சுந்தர்சியின் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய பார்த்திபன் தேசிங்கு, இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ஹிப்ஹாப் தமிழா உடன் இணைந்து அனகா ஹீரோயினாகவும், கரு.பழனியப்பன், விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கெளசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, ஆதி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வீடியோ மற்றும் புகைப்பட வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான புகைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஒரு ஹாக்கி விளையாட்டு வீரராக இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. 


Advertisement