ஜெய்பீம் , கர்ணன், சார்பட்டா பரம்பரை படங்களுக்கு தேசியவிருது இல்லையா?!  சாதியை மையமாக கொண்டு எடுத்தது தான் காரணமாம்?!

ஜெய்பீம் , கர்ணன், சார்பட்டா பரம்பரை படங்களுக்கு தேசியவிருது இல்லையா?!  சாதியை மையமாக கொண்டு எடுத்தது தான் காரணமாம்?!



national-awards-not-allotted-to-jaibeem-sarpatta-karnan

69ஆவது தேசியத் திரைப்பட விருதுகள், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம் என பல பிரிவுகளில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

'புஷ்பா' படத்துக்காக அல்லுஅர்ஜூனுக்கு சிறந்த நடிகர் விருது, 'கங்குபாய் கதியாவாடி' படத்தில் நடித்த அலியா பட் மற்றும் 'மிமி' படத்தில் நடித்த கீர்த்தி சனோன் ஆகியோருக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா படத்திற்கு இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாதத்திற்கு சிறந்த இசையமைப்பாளர் விருது, தமிழில் சிறந்த படமாக 'கடைசி விவசாயி' படமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஜெய்பீம் , கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தாலும், சிலர் சாதியை  மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்களுக்கு தேசியவிருது கிடைக்கவில்லை என்றால் நல்லது தான் என்றும், கடைசி விவாசியி படத்துக்கு விருது வழங்கியது மகிழ்ச்சி என்று சமூகவலைத்தளங்களில் அவர்களது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.