வாவ்.. எப்பவும் கியூட்தான்! மேக்கப் இல்லாமல், செம சிம்பிளாக நடிகை நதியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!!

வாவ்.. எப்பவும் கியூட்தான்! மேக்கப் இல்லாமல், செம சிம்பிளாக நடிகை நதியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!!



nathiya-latest-photo-viral-URJWFA

தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நதியா. அவர் 80, 90'ஸ் காலகட்டத்தில் பிரபு, சுரேஷ், மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். மிகவும் துறுதுறுவென செம க்யூட்டாக இருக்கும் இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக வந்தார்.

மேலும் பெண்களும் அவருக்கு பெரும் ரசிகர்களாக அவரது ஸ்டைலை ஃபாலோ செய்தனர். 
நதியா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.  இடையில் சில காலங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த நடிகை நதியா ரீ என்ட்ரி கொடுத்து தற்போது  சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

என்றும் துள்ளலான இளமையுடன் இருக்கும் நடிகை நதியா சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது அவர் யங் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது மேக்கப் இல்லாமல் மிகவும் சிம்பிளாக, கியூட்டாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.