சினிமா

நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம்!! மாப்பிள்ளை இவர்தானா? வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!

Summary:

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரபலமான தொடர் நாதஸ்வரம். இ

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிரபலமான தொடர் நாதஸ்வரம். இந்த தொடரில் ஹீரோவான திருமுருகனின் காதலியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை கீதாஞ்சலி. காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர் தனது முதல் சீரியலிலேயே, தனது நடிப்பால்  ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். அவருக்கு நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து ஏராளமான வாய்ப்புகள் வந்தது.

இந்த நிலையில் சென்னைக்கு குடிபெயர்ந்த கீதாஞ்சலி தொடர்ந்து வாணி ராணி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த தொடரை அடுத்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிறம் மாறாத பூக்கள் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் நடித்து வந்தார். இந்த நிலையில் ஒரே நேரத்தில் இரு தொடரின் ஷூட்டிங்கும் நடைபெற்றதால் அதில் கலந்துகொள்ள சிரமமாக இருந்த நிலையில் அவர் ராஜாராணி தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார். மேலும் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.

ஆனால் சமீப காலமாக சினிமா மற்றும் சீரியல் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில், தற்போது தனது சொந்த ஊரில் வசித்து வரும் கீதாஞ்சலிக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அதாவது அவருக்கும், திருவாரூரைச் சேர்ந்த கீர்த்தி ராஜ் என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறவுள்ளது. கீர்த்தி ராஜ் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தற்போது துபாயில் பணியாற்றி வருகிறாராம்.


 


Advertisement