இதுவரைக்கும் அந்த எண்ணமே எனக்கு இல்லை! நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் திறந்தார் நடிகை நஸ்ரியா!

இதுவரைக்கும் அந்த எண்ணமே எனக்கு இல்லை! நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் திறந்தார் நடிகை நஸ்ரியா!


nasriya talk about act in movie

தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா. அதனை தொடர்ந்து அவர் ராஜா ராணி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் அப்படத்தில் அவர் பேசிய பிரதர் என்னும் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

அதனைத் தொடர்ந்து நஸ்ரியா நையாண்டி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் அவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகை நஸ்ரியா நடிகர் பகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

nasriya

இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் தனது கணவருடன் இணைந்து டிரான்ஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது , திருமணத்திற்குப் பிறகு ஒரே ஒரு படத்தில்தான் நடித்தேன். தற்போது பகத் பாசிலுடன் இணைந்து டிரான்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறேன். நடிப்பை நிறுத்தியது  ஏன் என பலரும் கேட்கிறார்கள். நான் யாரிடமும் நடிப்பதை நிறுத்த போவதாக கூறவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று நஸ்ரியா கூறியுள்ளார்.