சினிமா

பொய்யான பாலியல் புகார் அளித்த நந்தினி சீரியல் நடிகை!. மன்னிப்பு கேட்டால் தான் இனி நடிக்கவே முடியும்!.

Summary:

nanthini serial actres sexual complaint

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி சீரியல், தமிழகத்திலே அனைவரையும் கவர்ந்த சீரியல் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த சீரியலுக்கு குழந்தை முதல் முதியவர் வரை ரசிகர்கள் உள்ளனர். ஐ டி ஊழியர்கள் கூட இந்த சீரியலுக்கு அடிமையாய் உள்ளனர்.

இந்த நிலையில் நந்தினி தொடரில் தான் நடிக்கும்போது நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக காவல்துறையில் புகார் கொடுத்தார்  நடிகை "ஓ போடு" ராணி.

இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்த இவர், சண்முகராஜன் மன்னிப்பு கோரியதால் அதனை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

                 

இந்நிலையில் நடிகை ராணி, தன் மீது பொய் புகார் கொடுத்து தன் பெயரை களங்கப்படுத்தி விட்டதாக நடிகர் சண்முகராஜன் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார்.                        

இது தொடர்பாக, ராணியிடம் விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அதற்கான பதிலை ராணி இது வரை வழங்கவில்லை. இந்நிலையில் நடிகர் சங்கம், நடிகர் சண்முகராஜனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நடிகர் சங்கத்தில் நடந்த செயற்குழுவில் தாங்கள் நேரில் வந்து விளக்கம் அளித்தீர்கள்.

nandhini serial shanmugarajan க்கான பட முடிவு

தங்கள் மீது, காழ்ப்புணர்ச்சியால் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது என்பதை நீங்கள் அளித்த விளக்கம் மூலம் தெரிந்துகொண்டோம். இதுவரை தனிப்பட்ட முறையில் நற்பெயர் பெற்றுள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த சம்பவத்திற்காக நடிகர் சங்கம் வருந்துகிறது.

இதனால் நடிகை ராணி, இனிமேல் திரைப்படத்திலோ, தொலைக்காட்சித் தொடரிலோ நடிக்க வரும்போது, அவர் தங்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டால் மட்டுமே தொடர்ந்து நடிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement