நானே வருவேன்.. புகைப்படத்துடன் நடிகர் தனுஷ் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

நானே வருவேன்.. புகைப்படத்துடன் நடிகர் தனுஷ் வெளியிட்ட சூப்பரான அறிவிப்பு!! உற்சாகத்தில் ரசிகர்கள்!!


nane-varuven-movie-shooting-finished

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தனது அண்ணனும், இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில்  நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இப்படத்தின் மூலம் தனுஷ் தனது அண்ணனுடன் 4வது முறையாக கூட்டணியில் இணைந்துள்ளார். 

மேலும் நானே வருவேன் திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் தனுஷ் வயதானவர், இளைஞர் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Nane varuven

இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். ஸ்வீடன் நாட்டை சேர்ந்த
எல்லி அவுரம் என்பவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அதனை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.