சினிமா

நடிகர் சிபிராஜுக்கு ஜோடியாகும் தளபதி விஜய் பட நடிகை! யார் தெரியுமா?

Summary:

Nandia swetha with sibi raj next project

நடிகர் சத்யராஜ் மற்றும் அவரது மகன் சிபிராஜ் இருவரும் இணைந்து ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது நாய்கள் ஜாக்கிரதை படத்தின் இயக்குனர் சக்தி சவுந்தராஜனின் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

காதல், ரொமான்ஸ் எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க திகில் மற்றும் மர்மம் கலந்த கதையாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்க உள்ளார்.

அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமவில் பிரபலமான இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிறு வேடத்தில் நடித்திருந்தார். தெப்போது பெரிய அளவில் இவரிடம் படங்கள் கைவசம் இல்லாத நிலையில் இந்த படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது.


Advertisement