சினிமா

இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நந்தினி நாயகி! மாப்பிளை இவர்தானா? வைரலாகும் அழகிய ஜோடி புகைப்படம்!

Summary:

nandhini serial nihtyaram second marriage photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் நந்தினி. இதில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தன் மூலம், ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை நித்யா ராம். இவர் இந்த தொடரில் நடிப்பதற்கு முன்பு தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி சீரியல் தொடர்களில் நடித்து அங்கும் பெருமளவில் பிரபலமானவர்.

நந்தினி சீரியல் வெற்றிகரமாக முடிவடைந்ததை தொடர்ந்து அவர் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்தார். மேலும் குஷ்பூ நடிப்பில் சன்டிவியில் ஒளிபரப்பான லட்சுமி ஸ்டோர் தொடரிலும் சில நாட்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நித்யா ராமுக்கு அடுத்த மாதம் இரண்டாம் திருமணம் நடைப்பெறவுள்ளது.  நித்யராமிற்கு 2014-ம் ஆண்டு வினோத் கௌடா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் நாளடைவில் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர்.

அதனை தொடந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நித்யாவிற்கு டிசம்பர் 6-ம் தேதி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கெளதம் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இருவரது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.


Advertisement