லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு வில்லனாகும் உச்ச நட்சத்திரம்! அட.. யார்னு பார்த்தீர்களா! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பின்னர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
நயன்தாரா கைவசம் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்கள் உள்ளன. இப்படத்தை தொடர்ந்து நயன்தாரா சீதக்காதி, பெட்ரோமாக்ஸ், அந்தகாரம் உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஃபேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் இரு படங்களில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதில் ஒரு திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாகவும், அதில் நயன்தாராவிற்கு வில்லனாக, நான் ஈ படத்தில் வில்லனாக நடித்த பிரபல கன்னட நடிகர் சுதீப் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.