சினிமா

திருமணமானாலும் குறையாத கவர்ச்சி! படவாய்ப்புக்காக இப்படியா? நமீதா வெளியிட்ட மோசமான ஹாட் புகைப்படம்!

Summary:

nameetha post glamour photo

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் கவர்ச்சி புயலாக வலம் வந்த இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. 

மேலும் நடிகை நமீதா தமிழ் மட்டுமின்றி  தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து தனது கவர்ச்சியால் கவர்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். மேலும் அதனை தொடர்ந்து பெருமளவில் உடல் எடை அதிகரித்த அவருக்கு சரியான படவாய்ப்புகள் ஏதும் வரவில்லை.

அதனை தொடர்ந்து நமீதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். பின்னர் அவர் கடந்த ஆண்டு தனது காதலரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் நமீதா திருமணத்திற்கு பிறகும் தற்போது  நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் . மேலும் இதற்காக கடினமாக உடற்பயிற்சியும் செய்து உடல் எடையை குறைத்துள்ளார்.அதனை தொடர்ந்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை கண்ட ரசிகர்கள்  படவாய்ப்புக்காக இப்படியா என விமர்சனம் செய்து வருகின்றனர்.


 


Advertisement