சினிமா

நடிகர் நகுல் தனது குட்டி தேவதைக்கு மூன்றெழுத்தில் செம கியூட்டாக என்ன பெயர் வைத்துள்ளார் பார்த்தீர்களா!

Summary:

Nagul daughter name is akira

தமிழ் சினிமாவில் பாய்ஸ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். பின்னர் அவர் காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து அவர்,ஏராளமான திரைப்படத்தில் நடித்து வருகிறார். நகுல் நடிகை தேவயானியின் தம்பி ஆவார். இவர் நடிகராக மட்டுமின்றி ஏராளமான ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

நடிகர் நகுல், கடந்த 2016 ஆம் ஆண்டு தனது காதலி ஸ்ருதி பாஸ்கர் என்பவரை  திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்  அவர் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்தார். அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த அன்பான ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாத நிலையில் வீட்டில் இருக்கும்  நகுல் தனது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் நகுல் மற்றும் அவரது மனைவி ஸ்ருதி பாஸ்கர் தங்களது குட்டி தேவதைக்கு மூன்றெழுத்தில் மிகவும் வித்தியாசமாக அகிரா என பெயர் வைத்துள்ளனர். இதனை மிகவும் உற்சாகத்துடன் அவர் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் குழந்தைக்கு குல்பி என செல்லபெயர் வைத்துள்ளனர்.                   


Advertisement