சினிமா

வீட்டில் விசேஷம்! செம ஹேப்பியாக நடிகர் நகுல் வெளியிட்ட தகவல்! குவியும் வாழ்த்துக்கள்!

Summary:

Nagul announced he became a father

தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல்.  அதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமான அவர் அதனை தொடர்ந்து காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.  

அதனை தொடர்ந்து அவர், மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பிரம்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  மேலும் தற்போது சுனைனாவுடன் எரியும் கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஏராளமான ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.

 நடிகர் நகுல், தனது காதலி ஸ்ருதி பாஸ்கர் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் நடிகர் நகுல், சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் அவர் தான் அப்பாவாக போகும் தகவலை, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது,  எனது இந்த பிறந்தநாள் எனக்கும், என் மனைவிக்கும் ரொம்ப ஸ்பெஷல். எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். உங்களது ஆசிர்வாதங்களும், வாழ்த்துக்களும் எங்களுக்கு வேண்டும்  என்று பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement