என் வாழ்க்கையையே மாற்றிய நாள்! நெகிழ்ச்சியுடன் நடிகர் பரத் வெளியிட்ட புகைப்படங்கள்! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?

என் வாழ்க்கையையே மாற்றிய நாள்! நெகிழ்ச்சியுடன் நடிகர் பரத் வெளியிட்ட புகைப்படங்கள்! அப்படியென்ன ஸ்பெஷல் தெரியுமா?


nadikar-bharath-tweet-about-kadhal-movie

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று காலத்தால் அழியாத காதல் காவியமாக இருக்கும் திரைப்படங்களில் ஒன்று "காதல்" . இந்த படம் 2004 ம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் பரத் மற்றும் நடிகை சந்தியா தங்களது நடிப்பு திறமையை பெருமளவில் வெளிக்காட்டி இருப்பார்கள். மேலும், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டு வசூல் சாதனையும் குவித்தது ‌. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் முதன்முதலாக தயாரித்துள்ளார்.இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆனநிலையில் அதனை நினைவு கூர்ந்து காதல் படத்தின் ஹீரோ பரத் தனது  டுவிட்டரில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், டிசம்பர் 17, 2004 16 வருடங்களுக்கு முன்பு எனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய நாள். எனது திரையுலக வாழ்க்கையில் ‘காதல்’ படம் ஒரு மைல்கல். ஐஸ்வர்யா மற்றும் முருகன் அப்போதும், இப்போதும் எனக் குறிப்பிட்டு, சமீபத்தில் நடிகை சந்தியாவை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை நடிகர் பரத் பகிர்ந்துள்ளார்.