80ஸ் தோழிகளுடன் நடிகை நதியா சந்திப்பு! அட..யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்!

80ஸ் தோழிகளுடன் நடிகை நதியா சந்திப்பு! அட..யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீர்களா!! வைரலாகும் புகைப்படம்!



nadhiya-meeting-with-her-80s-friend

தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை நதியா.அதனை தொடர்ந்து அவர் உயிரே உனக்காக , நிலவே  மலரே, ராஜாதி ராஜா, சின்ன தம்பி பெரிய தம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பின்னர்  அவர் சிரீஸ் என்பவரை திருமணம் செய்து  கொண்டார். அவர்களுக்கு சனம், ஜனா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நீண்ட நாட்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டிருந்த நடிகை நதியா மீண்டும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்ததன் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் அவர் பல படங்களில் நடித்துள்ளார்.


இந்நிலையில் நடிகை நதியா சமீபத்தில் மும்பையில் நடிகை குஷ்பு, பிரபல பாலிவுட் நடிகை பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நடிகை நதியா  80-களின் நெருங்கிய தோழிகளான குஷ்பு, பூனம் தில்லான் ஆகியோரை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது  என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.