சினிமா பிக்பாஸ்

இப்படியா பேசுவது! பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை சராமாரியாக கலாய்த்த நடிகை கஸ்தூரி

Summary:

nadaikai kusthuri

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் மூன்று ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் 3 போட்டியாளர்கள் வெளியே சென்றுவிட்டனர். இரண்டாவது வாரத்தில் செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு, அடுத்து மூன்றாவது வாரத்தில் நடிகை வனிதா, அடுத்ததாக நான்காவது வாரத்தில் மோகன் வைத்தியா அவர்கள் வெளியேறியுள்ளனர்.மீதம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் தற்போது இருந்து வருகின்றனர்.

ரேஷ்மா க்கான பட முடிவு

இதனையடுத்து நேற்று நடைபெற்ற டாக்கில் நடிகை ரேஷ்மா, இயக்குனர் சேரன் மீது கோபமாகி வயதுவரம்பு பார்க்காது கத்தியை நிகழ்வு நேற்றைய எபிசோடில் வெளியானது.இந்த நிகழ்வை குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.

நடிகை கஸ்தூரி கூறியதாவது: பிறந்தநாள் அன்று வயது கூடினால் போதுமா? வயதுக்கேற்ற முதிர்ச்சியும் பண்பும் கூட வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் டாஸ்க்கை வெறும் விளையாட்டாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


Advertisement