டபுள் ஆக்ஷனில் மிரட்டும் நடிகர் தனுஷ்! கெத்தாக வெளிவந்த மாஸான போஸ்டர்கள்!!

டபுள் ஆக்ஷனில் மிரட்டும் நடிகர் தனுஷ்! கெத்தாக வெளிவந்த மாஸான போஸ்டர்கள்!!


Naane varuven movie new posters released


இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன்'. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

நானே வருவேன் படத்தில் இந்துஜா, ஸ்வீடன் நாட்டு நடிகை எல்வி அவுரம், யோகி பாபு, ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படம் வெளியாவதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் தனுசின் இரு வித்தியாசமான தோற்றங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றநிலையில் அதனை வைரலாக்கி வருகின்றனர்.