அவர்தானா இது! முத்து பட நடிகை இப்போ எப்படி இருக்கார் பார்த்தீங்களா! சுத்தமா ஆள் அடையாளமே தெரியலைல!!muthu-movie-actress-subasri-photo-viral

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக இருந்த ஏராளமானோர் தற்போது அடையாளமே தெரியாமல், இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். அவ்வாறு நடிகர் அர்ஜீன் நடிப்பில் வெளிவந்த ஜென்டில் மேன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சுபஸ்ரீ.

இவர் கிளாமராக நடித்து பலரையும் கவர்ந்துள்ளார்.  அதனைத்தொடர்ந்து சுபஸ்ரீ  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். பின்னர் நாளாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

subasri

 இந்த நிலையில் சுபஸ்ரீ சற்று வயது கூடிய நிலையில் உடல் எடை அதிகரித்து, குண்டாகி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். சமீபத்தில் அவர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக அதனைக் கண்ட நெட்டிசன்கள் அவரா இது? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.