இப்போதான் பாத்தேன்.! தியேட்டர் சீட்ல யாரும் உட்காரமாடீங்க.! செம ஹேப்பியில் தமன்! ஏன்னு பார்த்தீங்களா!!

இப்போதான் பாத்தேன்.! தியேட்டர் சீட்ல யாரும் உட்காரமாடீங்க.! செம ஹேப்பியில் தமன்! ஏன்னு பார்த்தீங்களா!!



music-director-thaman-tweet-about-ranjithame-ranjithame

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகவுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும் இதற்கு தமன் இசையமைத்துள்ளார்.

வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமன் இசையில் நடிகர் விஜய் மற்றும் மானசியின் குரலில் பாடியுள்ள ரஞ்சிதமே ரஞ்சிதமே அண்மையில் வெளிவந்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இதுக்குறித்து இசையமைப்பாளார் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலின் மொத்த வீடியோவையும் இப்போதான் பார்த்தேன். தியேட்டர் சீட்ல யாருமே உட்கார மாட்டீங்க. உங்களோட நானும் ஒரு ரசிகனா… பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் விஜய் என மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.அந்த பதிவு வைரலாகி வருகிறது.