சினிமா

மறைந்த பாடகர் எஸ்பிபிக்கு கிடைத்த மாபெரும் கெளரவம்! நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி அவரது மகன் சரண் வெளியிட்ட உருக்கமான பதிவு!!

Summary:

எஸ்பிபி அவர்களை கௌரவிக்கும் விதமாக வேலூரில் உள்ள அரசு இசை மற்றும் நடன பள்ளி, டாக்டர் எஸ்பி பாலசுப்ரமணியம் இசை மற்றும் நடன பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சங்கீத ஜாம்பவானாக கொடிகட்டி பறந்தவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம். அவர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி  செப்டம்பர் 25ம் தேதி உயிரிழந்தார். 

இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈடு செய்ய முடியாத எஸ்பிபி. யின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். 

எஸ்பிபி அவர்கள் பிறந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆகும். இந்த நிலையில் எஸ்பிபி அவர்களை கௌரவிக்கும் விதமாக வேலூரில் உள்ள அரசு இசை மற்றும் நடன பள்ளி, டாக்டர் எஸ்பி பாலசுப்ரமணியம் இசை மற்றும் நடன பள்ளி என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தந்தைக்கு இத்தகைய மரியாதையை கொடுத்ததற்கு நன்றி கூறி எஸ்பிபி மகன் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில், ஆந்திர அரசுக்கும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 


Advertisement