ரஜினி, முருகதாஸ் அடுத்த படத்தின் பெயர் நாற்காலியா இல்லையா! முருகதாஸ் விளக்கம்

ரஜினி, முருகதாஸ் அடுத்த படத்தின் பெயர் நாற்காலியா இல்லையா! முருகதாஸ் விளக்கம்


Murugadoss explains about naarkaali

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பெயர் நாற்காலி என சில நாட்களாக பரவி வந்தது. ஆனால் இது உண்மை இல்லை என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தற்குப் பிறகு அரசியல் பணிகளில் ஈடுபடுகிறாரோ இல்லையோ வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். பேட்ட படம் ரிலிஸான உடனேயே முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். 

rajinikanth

பல சர்ச்சைகளை களப்பிய சர்க்காரை தொடர்ந்து முரகதாஸ் இந்த படத்தை இயக்க இருப்பதால் தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும் ரஜினியின் அரசியல் பயணம் தொடர்பாக இந்த படம் அமையும் என ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

இதில் சிலர் இதற்கென சொந்தமாக போஸ்டர்களை தயார் செய்து படத்திற்கு 'நாற்காலி' எனவும் பெயரிட்டு சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டனர். இதனை உண்மை என நினைத்து பலரும் அதனை பகிர துவங்கினர். சில தினங்களுக்கு முன்பு நாற்காலி என்ற பெயரில் ரஜினி நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போன்ற போஸ்டர் ஒன்றும் வெளியாகிப் பரபரப்பைக் கூட்டியது.

rajinikanth

இந்நிலையில், இவை அனைத்தும் வெறும் வதந்தி என முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், "எனது அடுத்த படத்தின் பெயர் நாற்காலி அல்ல. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம்" என கூறியுள்ளார்.