சினிமா

தளபதி 65 குறித்து அசத்தலான மாஸ் தகவலை வெளியிட்ட இயக்குனர் முருகதாஸ்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Summary:

Murugadass interview about thalapathi 65

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64 வது படமான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படம் வெளியாவதற்கு தயாராக உள்ளது.  மேலும் கொரோனா ஊரடங்கால் படம் வெளியாவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 65வது படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதனை தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.  இதனைத் தொடர்ந்து சமீபத்தில் ஃபேஸ்புக் லைவில் பேசிய இயக்குனர் முருகதாஸிடம் ரசிகர்கள், விஜய்யின் அடுத்த படத்தில் நீங்கள் கூட்டணி சேரவுள்ளது உண்மையா என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் இப்படத்தை பெரிய நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளது. அதனால் இதுகுறித்த தகவலை அவர்கள்தான் அதிகாரபூர்வமாக, முறையாக  அறிவிப்பார்கள். அதற்கு முன்பு நான் எதுவும் கூற முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தப் படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமா என கேள்வி எழுப்பியதற்கு இயக்குனர் முருகதாஸ், எந்தப் படத்தின் தொடர்ச்சியாகவும் இல்லாமல் இந்த படம் புதிதாக ஓப்பனாக இருந்தால் நன்றாக இருக்கும் என நான் எண்ணுகிறேன். ஒரு படத்தின் தொடர்ச்சி என்பது மீண்டும் ஒரு வட்டத்துக்குள் போட்டு அடைப்பது போல. அதைத் தாண்டி புதிதாக ஒன்றை யோசிக்க வேண்டும்  என அவர் கூறியுள்ளார்.


Advertisement