சினிமா

மறைந்த நடிகர் முரளி டைரியில் எழுதி வைத்திருந்ததை கண்டு, அவரது மனைவி செய்த நெகிழ்ச்சி காரியம்!

Summary:

Murali wife give murali debt amount to financiar

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் மறைந்த நடிகர் முரளி. இவருக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது. அதில் அவர் தான் கடன் பெற்ற அனைத்து நபர்களின் விவரங்களையும் எழுதி வைத்திருந்துள்ளார்.

அதில் பைனான்சியர் திருப்பூர் சுப்ரமணியம் என்பவருக்கு 17 லட்சம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டும் என எழுதி இருந்ததைக் கண்டு, முரளியின் மனைவி ஷோபா அவரை வீட்டிற்கு வரவழைத்து 17 லட்ச ரூபாயை எடுத்து கொடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த திருப்பூர் சுப்ரமணியன் நான் உங்களிடம் பணம் கேட்கவில்லையே, அவர் கொடுத்த பத்திரங்களை கூட கிழித்துப் போட்டு விட்டேன் என கூறியுள்ளார்.

அதற்கு ஷோபா இதுவும் எனது கணவர் பணம்தான். நான் அவர் வாங்கிய இடத்தை விற்றுதான் கடன் வாங்கியவர்களுக்கு பணம் கொடுத்து வருகிறேன்.முதலில் உங்களுக்குதான் தருகிறேன்.  ஏனெனில் நீங்கள் மட்டும்தான் இதுவரை பணம் குறித்து எதுவும் கேட்கவில்லை, மேலும் எனது கணவர் யாருக்கும் கடனாளியாக சென்றுவிடக்கூடாது என கூறியுள்ளார்.

பின்னர் தனது மகன் அதர்வா படத்தில் நடிக்கிறான். அவரை ஆசிர்வாதம் செய்யுங்கள் எனவும் கூறியுள்ளார். இத்தகைய நெகிழ்ச்சி சம்பவம் குறித்து பைனான்சியர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் பதிவிட்டுள்ளார்


Advertisement