சினிமா

மும்தாஜிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இயக்குனர்!. இயக்குனரை செருப்பால் அடித்த மும்தாஜ்!.

Summary:

mumtaj beat her slippers on director


மீடூ குறித்து தமிழ் திரையுலகில் உள்ள பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதனால் தமிழகம் மற்றும் சினிமாத்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வைரமுத்து, நடிகர் அர்ஜீன், இயக்குநர் சுசி கணேசன், நடிகர் தியாகராஜன் என அடுத்தடுத்து சிக்குகின்றனர்.

சில நடிகைகள் கூறுகையில் நாங்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானது கிடையாது. ஆனால் தங்களுக்கு பாலியல் தொடர்பான அழைப்பு வந்தது என்றும், ஆனால் அதனை நாங்கள் அந்த நொடியே நிராகரித்துவிட்டு சென்றுவிட்டோம் என பேட்டி அளித்துள்ளனர்.

அப்படி தனது திரையுலக பயணத்தில் தனக்கு நடந்தவை குறித்து நடிகை மும்தாஜ் கூறியதாவது, எனது முதல் படம் மோனிசா என் மோனாலிசா. அந்த படத்தையை டி.ராஜேந்தர் இயக்கினார்.

அவர் பெண்களை இதுவரை தொட்டு நடித்தது கிடையாது. நான் எனது முதல் படத்தில் எவ்வித பிரச்சனைகளையும் சந்தித்ததில்லை. ஆனால், அதன்பின்னர் என்னை பாலியல் ரீதியாக அணுகினார்கள்.

அதற்கு தயாராக இல்லை என்று அப்போதே மறுப்பு தெரிவித்து நான் அங்கிருந்து சென்றுவிட்டேன், ஒரு இயக்குநரை நான் செருப்பால் அடித்துள்ளேன். அன்றிலிருந்து அவர் என்னை பார்த்தால் பயப்படுவார்.

இந்த நிலையில் நான் அதுபற்றி பேசவிரும்பவில்லை. ஏனெனில் அன்று எனக்கு பாலியல் ரீதியாக அணுகியவர்கள், இன்று திருந்தியிருக்கலாம். அதனால் என்றோ ஒருநாள் நடந்த சம்பவத்தை நான் மீடூ மூலம் புகாராக தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.


Advertisement