
mugen sing with singer priyanga in bigboss house
பிக்பாஸ் சீசன் 3 சண்டை, காதல், மோதல், நட்பு என பலவற்றையும் கடந்து மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இன்றுடன் 100வது நாளை கடந்துள்ளது. மேலும் 16 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்த பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது ஷெரின், லாஸ்லியா, முகேன், சாண்டி என நான்கு பேர் மட்டுமே இறுதி நிலையில் உள்ளனர்.
மேலும் போட்டியாளர்கள் பிக்பாஸ் எவ்வளவோ கடுமையான டாஸ்க்குகளை கொடுத்தபோதும், அதனை முழுமூச்சுடன் தங்களது தீராத உழைப்பால் செய்து தற்போது இறுதிகட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று 100 வது நாள் கொண்டாட்டமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இசைக்குழுவுடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா வருகை தந்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து முகேனுக்கு பாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகேன் பாடலை பாடி அசத்தியுள்ளார்.இந்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலான நிலையில் பார்வையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Advertisement
Advertisement