செம ஸ்டைலாக, முகேன் எந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் பார்த்தீர்களா!! இணையத்தையே கலக்கும் வீடியோ !!

செம ஸ்டைலாக, முகேன் எந்த பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார் பார்த்தீர்களா!! இணையத்தையே கலக்கும் வீடியோ !!


Mugen dance in bigboss celebration

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மிக விறுவிறுப்பாக நடைபெற்றநிலையில்  கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. மேலும்  16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகேன் பிக்பாஸ் பட்டத்தை வென்று 50 லட்சம் தொகையை பெற்றார். 

இவர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தது முதலே அனைத்து போட்டியாளர்களிடமும் மிகவும் அன்பாக. நடந்து கொண்டார் மேலும் கைவினைப் பொருட்கள் செய்வது கலகலப்பாக இருப்பது என அனைவரிடமும் நட்பு பாராட்டி வந்தார். மேலும் போட்டியாளர்கள் மட்டுமின்றி கமலும் கூட அவரை சில இடங்களில் பாராட்டி பேசி இருந்தார்.

mugen

 இவ்வாறு மக்களிடையே பெருமளவில் பிரபலமான முகேன் அதிகளவு வாக்குகளை பெற்று பிக்பாஸ் பட்டத்தை தட்டிச்சென்றார். இந்நிலையில் பிக்பாஸ் முடிவடைந்த நிலையில், போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக தயாரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில் முகேன் தனது ஆல்பம் பாடலான  அபிநயா.. அபிநயா என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.