BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!"
ஹிந்தித் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் மிருணாள் தாகூர். 2018ம் ஆண்டு "லவ் சோனியா" என்ற ஹிந்திப் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதையடுத்து இவர் நடித்த ஹிந்திப்படங்கள் தோல்வியைத் தழுவின.

இந்நிலையில் தெலுங்குத் திரையுலகில் நுழைந்த மிருணாள் தாகூர், 2022ம் ஆண்டு "சீதா ராமம்" என்ற படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்திருந்தார். இத்திரைபபடம் தமிழ், தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இதன்மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார் மிருணாள் தாகூர்.
சமீபத்தில் நானியுடன் இவர் நடித்த "ஹாய் நன்னா" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் இவருக்கு 3கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் இவரது சொத்து மதிப்பு 33கோடிக்கு மேல் இருக்கும் என்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி இவரிடம் 30 லட்சத்தில் டொயோட்டா பார்ச்சுனர் காரும், 45 லட்சத்தில் ஹோண்டா அக்கார்டும் உள்ளதாம். சமீபத்தில் 2.17கோடியில் மெர்சிடெஸ் பென்ஸ் சொகுசு காரையும் வாங்கியுள்ள இவர், பல ஆடம்பர ஹாண்ட் பேக் வகைகளையும் வைத்துள்ளார் என்று வெளியாகியுள்ளது.