BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"சீதா ராமம் படத்தில் நடித்த நடிகையின் சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா!" இத்தனை கோடிகள் இருக்காம்!
"முஜ்சே குச் கெஹ்தி..யே காமோஷியான்"என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் மிருணாள் தாகூர். தொடர்ந்து இவர் "கும் கும் பாக்யா" என்ற தொடரின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன் பின்னர் 2018ஆம் ஆண்டு ஹிந்திப் படத்தில் தான் அறிமுகமானார்.

அதன்பிறகு ஹிந்தியில் தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்தவர், 2022ஆம் ஆண்டு "சீதாராமம்" படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றதோடு மட்டுமல்லாமல், இரண்டு சிமா விருதுகளையும் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மிருணாள் தாகூரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 2022ம் ஆண்டு அவரது சொத்து 28கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் 30 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா போர்ச்சுனர் காரும், 45 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா அக்கார்டும் வைத்துள்ளார்.

சமீபத்தில் 2.17கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரும் வாங்கியுள்ளார். பல விலை உயர்ந்த ஹேண்ட் பேக்குகளையும் வைத்துள்ள இவர், ஒரு படத்திற்கு 2கோடி சம்பளமாகப் பெறுகிறார். மேலும் விளம்பரங்களிலும் நடித்து வருவதால் இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது" என்று தெரிய வந்துள்ளது.