சினிமா

தளபதி விஜய்யின் வில்லு படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் இதுவா! அட.. என்னனு பார்த்தீங்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்ப

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்கள் தளபதி விஜய்யின் படம் வெளியாகும் நாட்கள், பிறந்த நாள் போன்றவற்றை கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடுவர்.

விஜய் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்து கலவையான விமர்சனங்களை பெற்ற திரைப்படம் வில்லு. இப்படத்தில் நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

வில்லு படத்திற்கு முதலில் சிங்கம் என்றுதான் தலைப்பு தேர்வு செய்துள்ளனர். அப்பொழுது அதே தலைப்பில் இயக்குனர் ஹரி படம் இயக்கியுள்ளார். பின் வில் என டைட்டில் வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் எஸ்.ஜே சூர்யா அந்த டைட்டிலில் தெலுங்கில் படத்தை இயக்கி வந்த நிலையில் பின்னரே வில்லு என மாற்றி வைத்துள்ளனர்.


Advertisement