சினிமா

அட..! விஜய் டிவி மௌனராகம் சீரியல் சக்தியோட அம்மா இவங்கதானா..!!! வைரலாகும் புகைப்படம்..

Summary:

விஜய் டிவி மௌனராகம் குட்டி குழந்தையின் தாயாரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் டிவி மௌனராகம் குட்டி குழந்தையின் தாயாரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற தொடர்களில் ஓன்று மௌனராகம். இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில், தொடரின் நாயகியாக நடித்த குட்டி குழந்தையின் உண்மையான பெயர் கிருத்திகா. தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றார் கிருத்திகா.

அதேபோல் இந்த தொடரின் மாபெரும் வெற்றிக்கு கிருத்திகாவின் நடிப்பும், அவரது கதாபாத்திரமும் கூட ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது மௌனராகம் சீசன் ஒன்று முடிவடைந்து, சீசன் 2 ஒளிபரப்பாகிவருகிறது. இந்த சீசனில் குட்டி குழந்தைகள் வளர்ந்து, குமரிகளாக மாறிவிட்டதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது.

சீசன் ஒன்றில் குட்டி குழந்தையாக நடித்த கிருத்திகா தற்போது பல்வேறு சினிமா படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிவருகிறார். இந்நிலையில் கிருத்திகாவின் உண்மையான தாயாரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement