சினிமா

மொட்டை ராஜேந்திரன் ஒரு காலத்துல இவ்வளவு அழகா! வெளியான புகைப்படம்!

Summary:

Motta rajendhiran photo with hair

இன்றைய தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். தனது அழகிய நடிப்பாலும், குரலாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தை பிடித்துள்ளார். வயதானாலும் மிகவும் கட்டுமஸ்தான் உடலில் காணப்படும் இவர் நான் கடவுள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

நான் கடவுள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவரை அனைவரும் நான் கடவுள் ராஜேந்திரன் என்று அழைக்க தொடங்கினர். அதன்பின்னர் இவர் நடித்த படங்களில் மொட்டை ராஜேந்திரன் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.

தமிழ், மலையாளம் படங்களில் ஸ்டண்ட் கலைஞராக அறிமுகமான ராஜேந்திரன் பல திரைப்படங்களில் தனது தலையில் அதிக முடியுடன்தான் இருந்துள்ளார். பிறகு ஏற்பட்ட ஒரு விபத்துகாரணமாகத்தான் இவரது தலையில் முடி அனைத்தும் கொட்டியுள்ளது.

தலையில் முடி இல்லாமல் மொட்டை தலையுடன்தான் நாம் இவரை அதிகம் பார்த்திருப்போம். இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் என்ற பெயரில் இயங்கும் டிவிட்டர் பக்கம் ஒன்றில் ஒரு காலத்தில் நானும் அழகுதான் நண்பா என்று மொட்டை ராஜேந்திரனின் புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.Advertisement