தமிழகம் சினிமா

மதமறுப்பு திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் இயக்குனர், நடிகர்; யார் தெரியுமா?

Summary:

moodar koodam naveen - marriage and politics

மூடர் கூடம் என்ற தமிழ் சினிமாவின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அப்படத்திலேயே கதாநாயகனாகவும் நடித்திருந்தவர் நவீன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தனது அடுத்த படமான ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தையும் இயக்கி அதிலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் கயல் ஆனந்தி நவீனுக்கு ஜோடியாக நடித்துள்ள நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த புதிய படம் ஒன்றினையும் எடுக்கவுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினியாக நடிக்க அர்ஜுன் ரெட்டி ஷாலினி பாண்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறாக சினிமா துறையில் பிஸியாக இருக்கும் நவீன், அரசியல் தொடர்பான தனது கருத்துக்களை முகநூல், வாட்ஸ் அப் பக்கங்களில் ஆளும் மத்திய அரசான பாரதிய ஜனதாவுக்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். அதேசமயம் யாருக்கும் எந்த கட்சிக்கும் ஆதரவாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வில்லை. மேலும் அந்த பதிவில் தனது காதல் திருமணம் நிகழ்ந்தது குறித்தும் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது திருமணப் பதிவில் ...எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம். நாங்கள் இருவரும் சாதிமத நம்பிக்கையற்ற பகுத்தறிவு பாதை நடப்பவர்கள் என்பதால்தான் காதல் பிறந்தது. என்றும் சிந்து சிந்துவாகவே இருப்பார். நாங்கள் மத எதிர்ப்பாளர்கள் இல்லை- மத மறுப்பாளர்கள், மனித சமத்துவத்தின் ஆதரவாளர்கள்#மனிதசமத்துவம்' ...என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement