விஜய் படத்தை நிராகரித்த பிரபல மலையாள நடிகர்.. அவரே கொடுத்த விளக்கம்!

விஜய் படத்தை நிராகரித்த பிரபல மலையாள நடிகர்.. அவரே கொடுத்த விளக்கம்!



Mollywood actor reject Vijay in GOAT movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Vinith Srinivasan

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்திற்கு GOAT என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Vinith Srinivasan

இந்த நிலையில் GOAT படத்தில் நடிக்கும் வாய்ப்பை தான் நிராகரித்ததாக மலையாள நடிகர் வினித் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 'நான் வர்ஷங்களுக்கு சேஷம்' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது எனக்கு GOAT படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நானே படத்தின் இயக்குனராக இருப்பதால் என்னால் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.