புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட திரௌபதி இயக்குனர்! பட டைட்டிலே சும்மா மிரளவைக்குதே!

திரௌபதி இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக ரிஷி ரிச்சர்டு நடிப்பில் ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கவுள்ளார்.


Mohan g announced about his next movie

மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் திரௌபதி. நாடக காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் சிலரால் எதிர்க்கப்பட்ட நிலையிலும், பலரால் பெருமளவில் கொண்டாடப்பட்டது. மேலும் வசூல் சாதனையும் படைத்தது. இப்படத்தில் நடிகை ஷாலினியின் சகோதரரான ரிஷி ரிச்சர்டு ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் திரௌபதி படத்தை தொடர்ந்து மோகன் தற்போது தனது புதிய படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ருத்ரதாண்டவம் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் திரௌபதி படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷி ரிச்சர்டு மீண்டும் ஹீரோவாக நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜுபின் இசையமைக்கவுள்ளார்.

இந்தநிலையில் ருத்ரதாண்டவம் படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதனை இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இதன் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் இயக்குனர் மோகனின் புதிய படத்திற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்