சினிமா

விஷ்ணு விஷால் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை இவர்தானா? வைரலாகும் செம கியூட் புகைப்படங்கள்!

Summary:

Miya george got engagement with businessman

தமிழ் சினிமாவில் ஆர்யாவின் தம்பி சத்யா  நடிப்பில் வெளியான அமரகாவியம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம்  அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ்.  அதனை தொடர்ந்து அவர்  வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை, விஜய் ஆண்டனியின் எமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  மேலும் இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜுக்கும் அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபருக்கும் திருமணம் பேசப்பட்டது.  மேலும் சில மாதங்களுக்கு முன்பு மிகவும் எளிமையாக வீட்டில் குடும்பத்தார்கள் திருமணத்தை முடிவுசெய்து நிச்சயதார்த்தம் செய்தனர். 

அதனைத் தொடர்ந்து நேற்று முறைப்படி மியா ஜார்ஜ் மற்றும் அஸ்வின் பிலிப் நிச்சயதார்த்தம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா செயின்ட் தாமஸ்  தேவாலயத்தில்  நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 


Advertisement