கண்ணுப்பட வைக்கும் கொள்ளை அழகில் கீர்த்தி சுரேஷ்! இணையத்தையே கலக்கும் மிஸ் இந்தியா பட ட்ரைலர்! வீடியோ இதோ!Miss india movie trailer released

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  மேலும்  சர்க்கார் படத்திற்குப் பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காத அவர் அடுத்ததாக ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  

மேலும் தெலுங்கில் மகாநடி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவருக்கு தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது நரேந்திர நாத் இயக்கத்தில் மிஸ் இந்தியா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இப்படம் தொழிலதிபராக வேண்டும் என்ற கனவோடு வாழும் ஒரு இளம்பெண் அதனை நிறைவேற்ற தனது வாழ்நாளில் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களை மையமாகக்கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஜேந்திர பிரசாத், ஜெகபதிபாபு, நதியா, நரேஷ், நவீன் சந்திரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார்.

 உடல் எடை குறைந்து, கொள்ளை அழகில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி  தளத்தில் நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, வைரலாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.