சினிமா

கடந்த 100 வருஷத்திலேயே இதுதான் சிறந்த படம்.. புகழ்ந்து தள்ளிய இயக்குனர் மிஷ்கின்! எந்தப் புது படத்தை தெரியுமா??

Summary:

100 வருஷத்தில் இதுதான் சிறந்த படம்.. புகழ்ந்து தள்ளிய இயக்குனர் மிஷ்கின்! எந்தப் புது படத்தை தெரியுமா??

தமிழ் சினிமாவில் காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. இப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. விவசாயிகளின் வாழ்க்கை தரம் குறித்து பேசும்  இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அப்படத்தை புகழ்ந்து முன்னணி இயக்குனரான மிஷ்கின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மிகச் சிறந்த படம் இதுதான். இது ரொம்ப எளிமையான, வலிமையான படம். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்.

இந்த படம் என் தாத்தாவை, அப்பாவை ஞாபகப்படுத்துகிறது. இப்படத்தை கொண்டாடவில்லை எனில் நமக்குள் தெய்வீகத்தன்மை இல்லை என்று அர்த்தம். இயக்குனர் மணிகண்டனுக்கு விழா எடுக்க ஆசைப்படுகிறேன். 

விஜய் சேதுபதியை கட்டி முத்தமிட இப்படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களின் காலில் விழுந்து முத்தமிட ஆசைப்படுகிறேன். மேலும் எனது மகள் கனடாவில் படித்து வருகிறார். அவரை தமிழ்நாட்டில் வந்து வாழும்படி கேட்க முடிவு செய்துள்ளேன் என பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement