சினிமா

முதல்வர் கேட்ட அந்த கேள்வி! அதிர்ந்துபோய் நின்ற பிரபல இயக்குனர்! அப்படி என்ன கேட்டுள்ளார் பார்த்தீங்களா!!

Summary:

முதல்வர் கேட்ட அந்த கேள்வி! அதிர்ந்துபோய் நின்ற பிரபல இயக்குனர்! என்ன கேட்டுள்ளார் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஸ்கின். அதனை தொடர்ந்து அவர் அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன் என அனைவரும் பாராட்டும் தரமான படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவரது இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த சைக்கோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் இயக்குனர் மிஸ்கின் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார். அப்பொழுது நிகழ்ந்தது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், இன்று எனக்கு முதல்வரை காணும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு புத்தககங்களை பரிசளித்தேன்.

பின்பு சிரித்தபடியே அவர் என்னிடம் எங்க ஆட்சி எப்படி இருக்கு என கேட்டார். இந்த கேள்வியை கேட்டவுடன் நான் ஷாக்காகிவிட்டேன். எதிர்க்கட்சிகள் கூட உங்களை போற்றுகிறார்கள், மக்கள் அனைவரும் உங்களை மனதார பாராட்டுகிறார்கள் என்று கூறினேன்.

அதற்கு முதல்வர் தமிழக மக்களுக்கு இன்னும் நான் நல்லது செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என யோசித்துக்கொண்டு இருக்கிறேன் என கூறினார். அதை கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். பின்னர் இவர் நூறு ஆண்டுகள் நன்றாக வாழவேண்டும் என வேண்டிக்கொண்டு நான் அங்கிருந்து விடைபெற்றேன் என குறிப்பிட்டுள்ளார். 


Advertisement