சினிமா

இயக்குனர் மிஷ்கினுக்கு பிறந்தநாளன்று காத்திருந்த இன்ப அதிர்ச்சி! பார்ட்டிக்கு யாரெல்லாம் வந்துருக்காங்க பார்த்தீர்களா! வைரலாகும் செம புகைப்படம்!

Summary:

Miskin birthday party photo viral

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் மிஷ்கின். அதனை தொடர்ந்து அவர் அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல வெற்றிபடங்களை கொடுத்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் படைத்தது.

அதனைத் தொடர்ந்து மிஷ்கின் அடுத்ததாக பிசாசு 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வெளியிட்டார். ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார். மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் மிஷ்கினின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னணி இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், கவுதம் மேனன், சசி, பாலாஜி சக்திவேல், லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டு, மிஷ்கினுக்கு கேக் ஊட்டி, தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். இந்த பார்ட்டியை இயக்குனர் மணிரத்னம் முன்னின்று நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Advertisement