சினிமா

7 ஆண்டுகள் காத்திருப்பு.! செம கொண்டாட்டத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார்!! என்ன காரணம் தெரியுமா?

Summary:

mirchi siva blessed boy baby after 7 years

துவக்கத்தில் மிர்ச்சி ரேடியோ ஸ்டேஷனில் ஆர்.ஜே வாக பணியாற்றி வந்தவர் சிவா. அதனை தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த அவர் வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28  திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து அவர்  சரோஜா, தமிழ்ப்படம், கலகலப்பு, தில்லுமுல்லு, வணக்கம் சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தனது காமெடியான பேச்சால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப்படம் 2  ரசிகர்களையே பெரும் வரவேற்பைப் பெற்றது.இதனை தொடர்ந்து சிவா தற்போது அவர் இயக்குனர் எஸ்.பி.ஹொசிமன் இயக்கி வரும் சுமோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

mirchi சிவா with wife க்கான பட முடிவு

நடிகர் சிவா தனது நீண்ட நாள் காதலியான, தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனை பிரியாவை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.இந்நிலையில் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆனநிலையில் சிவாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேலும் அவர்கள்  குழந்தைக்கு அகஸ்தியா என பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் அப்பாவான சிவாவிற்கு திரைப்பட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Advertisement