பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்கிறாரா பிரபல நடிகையின் திருநங்கை மகள்! அவரே கூறிய பதிலை பார்த்தீர்களா!!

பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்கிறாரா பிரபல நடிகையின் திருநங்கை மகள்! அவரே கூறிய பதிலை பார்த்தீர்களா!!


mila-answered-to-fan-who-asking-about-bigboss

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்த்தனர். கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

தற்போது கொரோனா இரண்டாவது அலையாக பரவி வந்த நிலையில் அக்டோபர் மாதம் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக பல பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. அதே போல் பிரபல நடிகை ஷகீலாவின் மகள், திருநங்கையான மிலாவும் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ள  உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

bigboss

இந்நிலையில் சமூக வலைதளத்தில் பிசியாக இருக்கும் மிலாவிடம் ரசிகர் ஒருவர், நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக கேள்விப்பட்டேன். அது உண்மையா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மிலா அதிஷ்டம் இருந்தால் நல்லதே நடக்கும் என்பது போல, வாய்ப்பை எதிர்பார்ப்பது போல fingers crossed என பதிலளித்துள்ளார்.