செம ஜாக்பாட்தான்! தளபதி 68ல் விஜய்க்கு வில்லனாகும் பிரபல முன்னணி நடிகர்.! சம்பளம் எவ்வளவு தெரியுமா??mike-mohan-salary-for-act-as-villain-in-thalapathy-68-m

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். புதிய கீதை திரைப்படத்திற்கு பின் சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜய், யுவன் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் பிரபுதேவா, சினேகா, நடிகை மீனாட்சி செளத்ரி, லைலா, பிரசாந்த், என பல பிரபலங்கள் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

vijay

இந்நிலையில் இப்படத்தில் 80ஸ் காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மைக் மோகன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சில ஆண்டுகள் நடிப்பதில் இருந்து விலகியிருந்த அவர் தளபதி 68 படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அப்படத்திற்காக நடிகர் மோகனுக்கு ரூபாய் 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.