சினிமா

நேர்கொண்ட பார்வை படத்தை பார்ப்பதற்காக, இந்த பிரபல நடிகர் செய்த காரியத்தை பார்த்தீர்களா!!

Summary:

metro shrish tweet about nerkonda parvai

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வினோத் இயக்கியுள்ளார்.

வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 8 நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில்  மெட்ரோ , ராஜா ரங்குஸ்கி உள்ளிட்ட படங்களில்  கதாநாயகனாக  நடித்த சிரிஷ் சரவணன், தான் தற்போது நடித்துவரும் படங்களின் தயாரிப்பாளருக்கு கோரிக்கை வைத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு தல காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் 8  நாளை நேர்கொண்ட தமக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார். 


Advertisement