சினிமா

தயாரிப்பாளர் சங்க தேர்தல்! டி.ராஜேந்தர் தோல்வி! வெற்றி பெற்றார் விஜய் பட தயாரிப்பாளர்!

Summary:

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி அடைந்தார். தேனான்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு நடிகரும், தயாரிப்பாளருமான  டி.ராஜேந்தர், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி மற்றும் பி.எல்.தேனப்பன் ஆகிய மூவரும் போட்டியிட்டனர். 

அதனை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.1303 வாக்காளர்களைக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தலில் 1050 வாக்குகள் பதிவாகியது.அதனை தொடர்ந்து சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு என்னும் பணி தொடங்கியது. 

 

இதில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.இவர் விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்துள்ளார். மேலும் அவருக்கு எதிராக போட்டியிட்ட டி.ராஜேந்தர் 378 வாக்குகளும், தேனப்பன் 87 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்துள்ளனர். 


Advertisement