இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மேக்னா ராஜ் எடுத்துள்ள முடிவு! மனம்திறந்து அவரே உடைத்த உண்மை!!megnaraj-talk-about-second-marriage

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா மற்றும் நந்திதா உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் மேக்னா ராஜ். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். மேக்னா ராஜ் சில வருடங்களுக்கு முன்பு கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

இந்த நிலையில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி திடீர் மரணமடைந்தார். அதனை தொடர்ந்து அவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மேலும் கணவரை பிரிந்து வாடிய மேக்னா மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

Megnaraj

இதற்கிடையில் நடிகை மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில், என் கணவர் இறந்த பிறகு என்னுடைய குழந்தையை வளர்ப்பது, அவனது எதிர்காலம் குறித்துதான் சிந்தித்து வருகிறேன். ஒரு சிலர் என்னை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள கூறுகிறார்கள். சிலரோ வேண்டாம் என்கிறார்கள். நான் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனது கணவர் எப்போதும் கூறுவார். யார் என்ன வேண்டுமானாலும் கூறுவார்கள். அதை கேட்டுக் கொள்ளவேண்டும். ஆனால் இறுதியாக நாம்தான் முடிவெடுக்க வேண்டும் என்று. இரண்டாவது திருமணம் குறித்து நான் என்ன முடிவு எடுத்தாலும், சிரஞ்சீவி என்னுடன் எப்போதும் இருப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதையெல்லாம் விட என் மகனுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும். அதுவே எனக்கிருக்கும் ஆசை என கூறியுள்ளார்.